news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜெம் வீரமணி வழக்கில் SIT குழு விரிவாக்கம்
tv

Also Watch

ஜெம் வீரமணி வழக்கில் SIT குழு விரிவாக்கம்

டிஜிபி உத்தரவு

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜெம் வீரமணி தொடர்புடைய பாலியல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐஜி தேன்மொழி தலைமையிலான குழுவில் மேலும் உதவி ஆணையர்கள் 7 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

போக்சோ வழக்கில்...
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 84 வயதான ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

டிஜிபி உத்தரவு
இந்த நிலையில், வீரமணி வழக்கை முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தக் குழுவில்,

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் பி.சி.தேன்மொழி
சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டல்
எஸ்.பி.யும் தமிழக காவல் துறை ஊடகத் தொடர்பு அதிகாரியுமான ஜெ.முத்தரசி
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலி
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விசாரணை தொடக்கம்
இதை தொடர்ந்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரை சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைத்து சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். வீரமணி வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை தொடங்கி உள்ளதால், மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
வீரமணி வழக்கில் காங். தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்

வீரமணி வழக்கில் காங். தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில் SIT குழு விரிவாக்கம்

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved