news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு
tv

Also Watch

திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

தமிழக சட்டப்பேரவையில்...

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து கோஷமிட்ட, திமுக எம்எல்ஏக்கள், அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

திமுகவினர் கோஷம்
மிசா, சர்க்காரியா குறித்த முதலமைச்சர் விஜயின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி சபாநாயகரை சூழ்ந்துகொண்டு திமுகவினர் கோஷமிட்டனர்.

திமுகவினர் மீது சபாநாயகர் குற்றச்சாட்டு
’பேரவையில் நேற்று முதல்வர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை,’ என சபாநாயகர் குற்றம் சாட்டினார்.

சர்காரியா கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது என சபாநாயகர் மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.

மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதல்வர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி என்றும் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

நீக்க முடியாது
மிசா மற்றும் சர்க்காரியா குறித்து, நேற்று முதல்வர் விஜய் பேசிய எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை, முதல்வரின் பேச்சில் எந்த குறையும் இல்லை, அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என சபாநாயகர் அறிவித்தார்.

திமுகவினர் வெளியேற்றம்
இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு, அமளியில் ஈடுபட்ட திமுகவினர் அவை காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். சபாநாயகர் சொன்னதன் பேரில் திமுகவினர் ஒட்டுமொத்தமாக, சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Related Link
சட்டப்பேரவை அமர்வு தொடக்கம், மிசா, சர்காரியா - கொந்தளித்த திமுக

சட்டப்பேரவை அமர்வு தொடக்கம், மிசா, சர்காரியா - கொந்தளித்த திமுக


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் விதிமீறி பேசியதாக திமுக கண்டனம்

22
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved