news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்...
tv

Also Watch

tv

Read this

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்...

சந்தைக்கு வந்துள்ள 9 காரட் தங்கம்

77

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

தற்போது சந்தைக்கு வந்துள்ள 9 காரட் தங்கம், சாமானியர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

தங்கம் என்றால் தங்கம் தான். அதை வாங்குவதில் தான், நம்மூர் பெண்களுக்கு அலாதி பிரியம். குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பதே, அம்மணிகளின் ஓயாத கனவு...
தங்கத்திற்கு மயங்காதே ஆட்களே இல்லை. நொடிக்கு நொடி தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

அழகான, மதிப்புமிக்க தங்கம், அலங்கார ஆடம்பர பொருளாகவும், செல்வத்தின் அடையாளமாகவும், நம்மூர் பெண்களால் கொண்டாடப்படுகிறது. ஒரு சிறந்த முதலீடாகவும், தேவைப்படும் போது பணமாக்கவும், திருமணத்திற்கு சேர்த்து வைக்கவும், தங்கத்திற்கு நிகர் தங்கமே. அதனால் தான் நம்மூர் பெண்கள் அதனை விட்டுவிட மனமின்றி சொக்கிக் கிடக்கின்றனர்.

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில், பிற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் தான் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால் தான், அட்சய திரிதியை மட்டுமல்ல, எப்போதும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சிலருக்கு கானல் நீராக இருக்கும் தங்கம், தற்போது கைக்கு எட்டப்போகிறது. இனி, இந்தியாவை 9 காரட் தங்கம் அலங்கரிக்கப்போகிறது. பொதுவாகவே, 24 காரட், 22 காரட் என சந்தையில் தங்கம் விற்கப்பட்ட போதிலும், அதன் மீதான மோகத்தால், 18 காரட், 14 காரட் அளவில் உள்ள தங்க நகைகளை வாங்குவது உண்டு.

இந்நிலையில், மத்திய அரசு, தங்கம் வாங்கும் நுகர்வோர்களை ஊக்குவிக்கும் வகையில், ஹால்மார்க் தர நிலைகளில் 9 காரட் தங்கத்திற்கு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) ஹால்மார்க்கிங் அமைப்பில், 9 காரட் தங்கமும் சேர்க்கப்பட்டது. 

BIS அமைப்பு கட்டாய ஹால்மார்க் பிரிவில் 9 காரட் நகைகளை சேர்த்துள்ள நிலையில், இனி ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பட்டியலில் 24KF, 24KS, 23K, 22K, 20K, 18K, 14K உடன், தற்போது 9K சேர்க்கப்பட்டுள்ளது.

வேறு எந்த உலோகமும் சேர்க்காத 24 காரட் தங்கம் என்பது 99.9 தூய்மையான சுத்தமான தங்கம்.

ஆனால், 9 காரட் தங்கத்தில் 37.5% மட்டும் தூய்மையான தங்கமும், மீதமுள்ள 62.5 சதவீதத்தில், செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்றவை கலக்கப்பட்டிருக்கும். அதாவது, 9 காரட் தங்கத்தில், 1000 கிராமில் 375 கிராம் மட்டுமே சுத்த தங்கம் இருக்கும். 

தூய்மையான 24 காரட் தங்கத்துடன் ஒப்பிடுகையில், 9 காரட் தங்கத்தின் விலை குறைவு, இதை வடிவமைப்பதும் எளிது. குறைவான பட்ஜெட்டுடன் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு, இது சிறந்த தேர்வாக இருக்கும்.

 

இன்றைய நிலவரப்படி(ஆகஸ்ட் 25), சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரன் 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேநிலையில், 9 காரட் தங்கம் ஒரு கிராம் 3 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், ஒரு சவரன் 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது தான் வித்தியாசம்...

அடுத்தடுத்து விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, நவராத்திரி என, பண்டிகைகள் வரிசைகட்டி வர உள்ளதால், தங்க ஆபரணங்களின் விற்பனையும் விண்ணை முட்டும்.

இனி, தங்கமும் நம் வசமே என்பது சாமானியர்களை, கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
3 hrs 34 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved