news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் -II திட்டம் வெற்றி
tv

Also Watch

tv

Read this

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் -II திட்டம் வெற்றி

வண்ணங்களில் ஜொலித்த நியூயார்க் நகரம்

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாசாவின் ஆர்டெமிஸ் II குழு, 10 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பூமிக்கு திரும்பியது.

நிலவில் மனிதர்கள்...
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நிலையான திட்டத்தின் ஒரு பகுதியாக, ஓரியன் விண்கலத்தின் செயல்பாடுகளை சோதிக்கும் வகையில் ரீட் வைஸ்மேன் தலைமையில், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோக், ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் கொண்ட குழு கடந்த ஒன்றாம் தேதி விண்வெளிக்கு சென்றது.

பாராசூட் உதவியுடன் பசிபிக் பெருங்கடலில்...
சாதனை படைக்கும் வகையில், நிலவை சுற்றி வந்த இந்த குழுவினரின் ஓரியன் விண்கலம் இந்திய நேரப்படி சரியாக 5.37 மணிக்கு பசிபிக் கடலில் இறங்கியது. மூன்று பாராசூட்களின் உதவியுடன் இறங்கிய விண்வெளி வீரர்களை விண்கலத்திலிருந்து வெளியேற செய்து மருத்துவ பரிசோதனைக்காக மீட்பு கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வண்ணங்களில் ஜொலித்த நியூயார்க் நகரம்
ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் சென்ற நாசா வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய நிலையில், அமெரிக்காவில் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம் சிவப்பு, வெள்ளை, நீல நிற வண்ணத்தில் ஒளிரவிடப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. 10 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 4 பேரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி உள்ளனர்.

Related Link
இதுவரை கண்கள் காணாத பேரழகு - அசத்திய நாசா

இதுவரை கண்கள் காணாத பேரழகு - அசத்திய நாசா

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத் டைட்டன்ஸ் முன்னிலை, பின் தொடரும் RCB, SRH

2
9 mins agoshare
குஜராத் டைட்டன்ஸ் முன்னிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved