ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை தேர்வு செய்து, இந்த தொடரின் சிறந்த அணியை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதில் தென் ஆப்பிரிக்காவின் கைலா ரெய்னெக் கேப்டனாகவும், இங்கிலாந்தின் கேட்டி ஜோன்ஸ் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கொங்காடி திரிஷா, ஜி கமலினி, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா என 4 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.