மாமியாருக்கு ஃபோன் செய்து கதறி அழுத மருமகன். பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி. நடுவீட்டில் மகள் கழுத்தில் காயங்களோடு சடலமாக கிடந்த கொடூரம். சடலத்தின் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த குழந்தைகள். இளம்பெண்ணை கொலை செய்தது யார்? தப்பி ஓடிய கொலையாளி சிக்கினானா? நடந்தது என்ன?பதறியடித்து மகள் தீபிகா வீட்டிற்கு ஓடி வந்த தாய்மாலை நேரம், தன்னோட மாமியாருக்கு ஃபோன் பண்ண சௌரப் துபே, உங்க பொண்ணு பேச்சு மூச்சுல்லாம கிடக்குறா, கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லி அழுதுருக்காரு. என்ன மாப்ள என்ன ஆச்சு என் மகளுக்குன்னு மாமியார் கேட்ருக்காங்க. அதுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாம சௌரப் ஃபோன கட் பண்ணிட்டாரு. இதனால பதற்றமடைந்த மாமியார் தனது மகன கூப்டுட்டு மகளோட வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப கதவு வெளிப் பக்கமா பூட்டிக் கிடந்துருக்கு. அடுத்து கதவ தொறந்துட்டு உள்ள போய் பாத்துருக்காங்க. அங்க மகள் தீபிகா கழுத்துல துணி சுத்தப்பட்ட நிலையில உயிரிழந்து கிடந்துருக்காங்க. மகள் கிடந்த கோலத்த பாத்து தாய் கதறி அழுதுருக்காங்க. அடுத்து மருமகன் சௌரப் துபேவ, தேடி பாத்துருக்காங்க. ஆனா எங்க தேடியும் அவர காணல. இதனால அவரு மேல சந்தேகமடைஞ்ச தாய் உடனே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க.தீபிகாவின் தாயிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸ்இதகேட்டு, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் தீபிகாவோட சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து தீபிகாவோட தாய் கிட்ட என்ன ஏதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அது மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், சௌரப்ப வலைவீசி தேட ஆரம்பிச்சாங்க. அந்த பகுதியில உள்ள சிசிடிவி கேமரா, அவரோட செல்போன் நம்பர்ன்னு எல்லாத்தையும் செக் பண்ணி தேடுதல் வேட்டையில இறங்குனாங்க. சௌரப் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட தீபிகாஉத்தரப்பிரதேசத்துல உள்ள பங்கி பகுதிய சேந்தவரு சௌரப் துபே. இவருக்கு ஏற்கனவே மூன்று பெண்களோட கல்யாணம் ஆகிருக்கு. மதுபோதைக்கு அடிமையான சௌரப், தனது மனைவிகள நிர்வாணப்படுத்தி, பெல்ட்டால அடிச்சு தினமும் சித்ரவதை பண்ணிருக்காரு. இதனால மூன்று மனைவிகளும் இவர பிரிஞ்சு போய்ட்டாங்க. இதுக்கிடையில சௌரப்புக்கு பேஸ்புக் மூலமா அதே பகுதியை சேந்த தீபிகா கூட பழக்கம் ஆகிருக்கு. தீபாவுக்கும் ஏற்கனவே கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. தீபிகாவோட கணவர் ஒரு விபத்துல உயிரிழந்துட்டாரு. இதனால அவங்க ரெண்டாவதா சௌரப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அடுத்து தீபிகா தன்னோட கணவன் குழந்தைகளோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தாங்க.கூடுதல் வரதட்சணை கேட்டும் டார்ச்சர் செய்ததாக குற்றச்சாட்டுஆனா நாள் ஆக ஆக சௌரப்போட இன்னொரு முகம் தீபிகாவுக்கு தெரிய வந்துருக்கு. கல்யாணம் முடிஞ்சு கொஞ்சம் நாட்கள் மட்டும் நல்லபடியா இருந்த கணவன், அடுத்து டெய்லி மதுபோதையில வீட்டுக்கு வந்து மனைவிய போட்டு அடிச்சு சித்ரவதை பண்ணிருக்காரு. அதுமட்டும் இல்லாம வரதட்சணை கேட்டும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுருக்காரு. அதுக்கு தீபிகா, எங்க அப்பா, அம்மா ரொம்ப வசதியானவங்க கிடையாது, நாங்க ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம், என்னோட முதல் கல்யாணத்துக்கே எங்க வீட்ல ரொம்ப செலவு பண்ணிட்டாங்க, அதனால என்னால வீட்டுக்கு போய் வரதட்சணை கேட்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இதகேட்டு கடும் கோபமான சௌரப் முதல் கணவனுக்கு வரதட்சணை கொடுத்த மாதிரி எனக்கும் வரதட்சணை வாங்கிட்டு வான்னு சொல்லி மனைவிய நிர்வாணப்படுத்தி அடிச்சுருக்காரு. அதுக்கு மனைவி மறுப்பு தெரிவிச்சுருக்காங்க. இதனால ஆத்திரமடைஞ்ச கணவன் உனக்கு இன்னும் ஒரு வாரம் தான் டைம், அதுக்குள்ள வரதட்சணை வாங்கிட்டு வரலனா, உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாதுன்னு சொல்லி மிரட்டிருக்காரு.சௌரப்பை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்இதனால, தீபிகா தன்னோட வீட்டுக்கு போய்ட்டு பணம் கேட்டு பாத்துருக்காங்க. ஆனா அவங்க வீட்ல பணம் எதுவும் கொடுக்கலன்னு கூறப்படுது. சம்பவத்தன்னைக்கு நைட்டு வழக்கம் போல மதுபோதையில வீட்டுக்கு வந்துருக்காரு சௌரப். அப்ப மறுபடியும் வரதட்சணை கேட்டு மனைவி கூட சண்டை போட்ருக்கான். அந்த நேரத்துல ரெண்டு பேருக்கு இடையில வாக்குவாதம் அதிகமானதா கூறப்படுது. இதனால கடும் கோபமான கணவன், மனைவிய போட்டு சரமாரியா அடிச்சுருக்கான். இதுல வலிதாங்க முடியாத தீபிகா சம்பவ இடத்துலையே மயங்கி விழுந்துட்டாங்க. அடுத்து வீட்ல இருந்த துணியால சௌரப், கழுத்த நெரிச்சு மனைவிய துடிக்க துடிக்க கொன்னுருக்கான். அடுத்து மாமியாருக்கு ஃபோன் பண்ணி உங்க மகள் பேச்சு மூச்சுல்லாம கிடக்குறா, கொஞ்சம் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டு ஃபோன கட் பண்ணிட்டு தப்பிச்சு போய்ட்டான். விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் அதே பகுதியில பதுங்கி இருந்த சௌரப்ப அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link கணவரை பிரிந்து வாழ்ந்த அத்தை மகள்