இளைஞர்களின் சக்தி இந்தியாவை விரைவில் வளர்ந்த நாடாக மாற்றும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இளைய தலைவர்களின் கருத்தரங்கை தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர், நாட்டின் இளைஞர் மீது விவேகானந்தர் வைத்திருந்ததை போன்று தாமும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார்.