திமுக உடனான கூட்டணியில் புகைச்சலை கிளப்பி ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள் விவாதத்தை உருவாக்கிய சூழலில், கூட்டணியை பற்றி நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம் என்றும், அதுவரை சமூக வலைதளங்களிலோ பொதுவெளியிலோ எந்த கருத்தையும் கூறாமல் இருக்க வேண்டும் எனவும், தமிழக காங்கிரசுக்கு, டெல்லி தலைமை வாய்ப்பூட்டு போட்டு அனுப்பி உள்ளது.ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கடந்த சில மாதங்களாகவே கம்பு சுற்றிக் கொண்டிருந்த கதர்ச் சட்டைக்காரர்களின் குரலுக்கு கடிவாளம் போட்டு அனுப்பியிருக்கிறது டெல்லி காங்கிரஸ் தலைமை. தமிழ்நாட்டில் திமுக உடன் கூட்டணியில் நீடிக்கும் காங்கிரஸ் கட்சி, முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு கூட்டணிக்குள் புகைச்சலை கிளப்பி, அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டியது. திமுக கூட்டணி உடையும் என ஏற்கனவே எதிர்க்கட்சிகள் புரளிகளை கிளப்பிவந்த நிலையில், அதற்கு தீனி போட்டு, வேடிக்கை பார்த்தது தமிழக காங்கிரஸ். கூட்டணி தலைமையான திமுக, காங்கிரசின் கோரிக்கை பற்றி பொதுவெளியில் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளிக்கவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினர் புள்ளிவிவரங்களுடன் காங்கிரசுக்கு தங்கள் பாணியில் பதிலடி தந்தனர்.”அல்ற சில்ற ஐடி விங்” குறிப்பாக காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், திமுக ஐடிவிங்கை ”அல்ற சில்ற ஐடி விங்” என குறிப்பிடும் அளவுக்கு, சமூக வலைதளங்களில் திமுகவினர் காங்கிரஸை போட்டு பிளந்து கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் காங்கிரசின் பலம் என்ன, வாக்கு சதவீதம் எவ்வளவு உள்ளிட்டவற்றை இரு தரப்பினரும் மாறி மாறி பதிவிட்டு வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை பட்டும் படாமலும் இந்த விவகாரத்தை கையாண்டு வந்தார்.சுமார் 4 மணி நேரம் ஆலோசனைஇரு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாட்டால் கலக்கமடைந்த காங்கிரஸ் தேசிய தலைமை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்து அவசர ஆலோசனை நடத்தியது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து, கருத்து கேட்டு சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். கேரளா, கர்நாடகா, தெலங்கானாவுக்கு அடுத்தபடியாக காங்கிரசுக்கு நம்பிக்கையளிக்க கூடிய மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். அதே போல், எம்.பிக்களின் எண்ணிக்கையிலும் திமுகவே முன்னிலை வகிப்பதால் அந்த கூட்டணியில் இருந்து விலக தேசிய தலைமைக்கு விருப்பமில்லை என சொல்லப்படுகிறது.முகத்தில் அறைந்தார் போல் வாய்ப்பூட்டுதேசிய தலைமை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைவர்களில் பெரும்பாலானோரும் திமுக கூட்டணியிலேயே நீடிக்கலாம் என்றும், கூடுதலாக தொகுதிகளை பெறலாம் என்று கருத்து கூறியதாகவும் தெரிகிறது. ஒரு சிலரே தவெக கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்ததாகவும், அதிகாரத்தில் பங்கு கேட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது. நிர்வாகிகளின் கருத்துகளை ஆற அமர கேட்டுக்கொண்ட ராகுலும் கார்கேவும், எதுவாக இருந்தாலும் நாங்கள் பேசிக் கொள்கிறோம், அதுவரை யாரும் சமூக வலைதளங்களிலோ பொதுவெளியிலோ கூட்டணி பற்றி பேசவேண்டாம் என முகத்தில் அறைந்தார் போல் சொல்லி வாய்ப்பூட்டு போட்டு அனுப்பி உள்ளது.கூச்சல் குழப்பம் கூட்டணியில் நீடிக்கும்கூட்டணி தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும், டெல்லி தலைமை முடிவு செய்யும் என கூறிய செல்வப்பெருந்தகை, திமுகவுடன் கூட்டணி தொடருகிறது என்று அழுத்தம் திருத்தமாக கூறாததும் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டிருக்கிறது. என்னதான் கூட்டணி பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது என, தேசிய தலைமை கிளாஸ் எடுத்தாலும், சென்னை வந்த மறுநாளே மாணிக்கம் தாகூர் வழக்கம் போல திமுக ஐடி விங்கை வெறுப்பேற்றி ட்வீட் போட்டுக்கொண்டிருப்பது, சொந்த கட்சியினரையே சூடேற்றியிருக்கிறது. அடுத்த ஓரிரு நாட்களில் காங்கிரஸ் கூட்டணி பற்றி தெளிவான அறிவிப்பை வெளியிடும் என தகவல் கசிந்துள்ள நிலையில், அதுவரை இதுபோன்ற கூச்சல் குழப்பம் கூட்டணியில் நீடிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதையும் பாருங்கள் - தி.மலை கோவிலில் புரோக்கர்களின் ராஜ்ஜியமா?