news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள் - விஜய் ஆவேசம்
tv

Also Watch

tv

Read this

அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள் - விஜய் ஆவேசம்

நெல்லையில் விஜய் வாக்கு சேகரிப்பு

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தம் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதாக தவெக தலைவர் விஜய், வேதனை தெரிவித்து உள்ளார். கரூர் துயரம் பற்றியும், தன்னைச் சுற்றி இருப்பவர்களை வைத்து அவதூறு பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

நெல்லைக்கு வந்த விஜய்
நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது;
திமுக கையில், இந்நேரம் முழு பவரும் இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சி நடந்து இருக்காது. எதாவது முட்டுக்கட்டை போட்டு என்னை வரவிடாமல் செய்திருப்பார்கள். திமுக அரசு எவ்வளவோ அவதூறுகளை நம் மீது பரப்பினார்கள். திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெளியே தனியாக தெரிந்தாலும், உள்ளே அவர்கள் ஒன்று தான். இருவருக்குமே ஒரே நோக்கம் தான். உங்களுக்காக நான் களத்துக்கு வரக் கூடாது என்றே இருவரும் நினைக்கின்றனர். நாம் வந்த பிறகு, அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை, அதனால்தான் என் மீது கோபம்.

காங்கிரஸ் நம் பக்கம்
திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களே தங்கள் கூட்டணிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் போல. அந்த அளவில் இருக்கிறது அந்த கூட்டணி. சில கோடிகளை கொடுத்து காங்கிரஸை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸ் நம்முடன் தான் நிற்கிறது.

சிறுபான்மை மக்கள் நம் பக்கம் நிற்பதை பார்த்து திமுகவுக்கும் பாஜகவுக்கும் நம் மீது கோபம். அவர்களது வீட்டிலேயே விசில் சத்தம் சவுண்டா கேட்குது. அதனால் தான், நம் மீது அவர்களுக்கு காண்டு.

கட்சி ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்லவில்லை. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று விட்டு தான் கட்சியே ஆரம்பித்து இருக்கிறேன்.

ஜனநாயகனை முடக்கினார்கள்
கரூர் விஷயத்தை பற்றி ஊருக்கே தெரியும். ஆனாலும், என் மீது பழி போட்டார்கள். அவ்வளவு பெரிய பழியை போட்டும் எடுபடவில்லை என்றவுடன் தான், ஜனநாயகனை முடக்கினார்கள்.

அப்போதும் நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்ததாக, பிரசாரம் செய்யவிடாமல் SOPஐ வைத்து முடக்கப் பார்த்தார்கள். பின்னர் என்னை சுற்றி இருப்பவர்களை வைத்தே, இத்தனை வருடமாக காத்திருந்து தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பாக அவதூறு பரப்ப வைத்தனர். நீங்கள் என்ன செய்தாலும் என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது.

நடக்கப்போவது மாற்றத்துக்கான தேர்தல்
தவெக வேட்பாளர்கள் யாரும், டாடாவோ பிர்லாவோ அம்பானியோ இல்லை. இது, இந்தியாவே பார்க்காத தேர்தல். 50 வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் சம்பவத்தை போன்றது.

மிஸ் பண்ணிடாதீங்க. மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவை கூட தொடும் தேவை எனக்கு இல்லை. என்னை எதிர்ப்பவர்களால், இப்படி சொல்ல முடியுமா?

விளாத்திகுளத்தில் கழிப்பறை இல்லாததால், பெண் அப்பாவியாக உயிரிழந்தாளே. போலீஸ் துறையை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள்? பொம்மை மாதிரி விளையாடினீர்களா? ஆட்சி முழுவதும் ஊழலில் நாறிப்போய் கிடக்கிறது. நடக்கப்போவது மாற்றத்துக்கான தேர்தல்.
இவ்வாறு பேசி, தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரித்தார்.

Related Link
விஜய் வேட்புமனு, கடைசி வரை த்ரில், BPஐ எகிற வைத்த பரிசீலனை

விஜய் வேட்புமனு, கடைசி வரை த்ரில், BPஐ எகிற வைத்த பரிசீலனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புறம்போக்கு இடம் வனப்பகுதியாக மாற்றப்பட்டதாக அறிவிப்பு

2
19 mins agoshare
தர்மபுரி பாலக்கோடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved