Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், தேரோட்டம் முடிந்த பின் பக்தர்கள் ஏராளமான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்போது பொதுமக்கள் பலர் தலைக்கவசம் அணிந்து சென்று, சிதறிய தேங்காய்களை அள்ளி சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved