news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சிபிஐயிடம் விஜய் கோரிக்கை மனு
tv

Also Watch

tv

Read this

சிபிஐயிடம் விஜய் கோரிக்கை மனு

கரூர் சம்பவம் - 3 முறை நேரில் ஆஜர்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேர்தல் பணிகள் உள்ளதால், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் ஆஜராவது குறித்து, பரிசீலனை செய்ய வேண்டும் என்று, தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்து உள்ளார். தமிழ்நாட்டில் விசாரணை நடத்தினால், நேரில் ஆஜராக தயாராக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டு, வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

என்ன சொல்கிறார் விஜய்?
டெல்லி சிபிஐ அலுவலகத்தில், நேற்று மார்ச் 15ஆம் தேதி நேரில் ஆஜரான விஜய், இதுதொடர்பாக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்ன சொல்கிறார் விஜய்...?

* கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு விசாரணையை இனி, தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும்

* தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காலம் என்பதால், அடிக்கடி டெல்லி வந்து செல்வதில் சிரமம் உள்ளது

* கரூர் வழக்கில் CBI நடத்திய 3 விசாரணையிலும் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன்

* தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை பரிசீலிக்க வேண்டும் - CBIயிடம் விஜய் தரப்பு கோரிக்கை

* நேற்றைய விசாரணையின் போது விஜய் தரப்பில் சிபிஐ அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினார் என்று தகவல்

இவ்வாறு விஜய் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
2 hrs 55 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved