பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி வடிவத்தை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. திமுகவுக்கு எதிராக கூட்டணியை வலுப்படுத்தி வரும் நிலையில், பிரதமரின் பொதுக்கூட்டம் சொல்லப் போகும் செய்தி என்ன? திமுகவுக்கு எதிராக என்ன மாதிரி வியூகத்தை அமைக்கப் போகிறது பிரதமரின் பொதுக்கூட்டம் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.நெருங்கும் தேர்தல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அடுத்தடுத்த பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, அன்புமணியின் பாமக மற்றும் அமமுக கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்து விட்டது. அடுத்ததாக தமாகா, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், ஐஜேகே ஆகியோருடனும் பேசி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் தேமுதிக தரப்பில் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த சிக்னலும் கொடுக்கப்படாமல், இழுபறியில் நீடித்து வருகிறது. தேமுதிக இரட்டை இலக்கத்தில் சீட்டு உள்ளிட்ட பல டிமாண்டுகளை கேட்டு அடம் பிடித்து வருவதால் கூட்டணியை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பிரதமர் மோடி இதனிடையே, பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காகவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தில் முகாமிட்டு அடுத்தடுத்து மீட்டிங் நடத்தி வருகிறார். EPS வீட்டில் பியூஷ் கோயல் மீட்டிங்இந்நிலையில், தமிழகத்தில் முகாமிட்டுள்ள பியூஷ் கோயலுக்கு, இ.பி.எஸ். வீட்டில் காலை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலையிலேயே பசுமை வழிச்சாலையிலுள்ள இ.பி.எஸ். வீட்டுக்கு வந்த பியூஷ் கோயல், காலை விருந்துடன் சேர்த்து பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கும் தொகுதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கிறார்கள். இந்த விருந்தில் பியூஷ் கோயல், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர். விருந்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், பியூஷ் கோயலும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.உதயநிதியை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும்அப்போது பேசிய பியூஷ் கோயல், NDA கூட்டணி மூலம் திமுக அரசு துடைத்து எறியப்படும் என்றதோடு, அனைத்து மக்களும் குடும்ப ஆட்சியின் ஊழலை உணர்ந்திருக்கிறார்கள் எனவும் கூறினார். மேலும், தேசத்திற்கு எதிராக, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாக கூறி பியூஷ் கோயல், உதயநிதி ஸ்டாலினை உடனடியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார். NDA கூட்டணிக்கு அச்சாணிதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், மொத்தமாக 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் எனவும் கூறியதோடு, அந்த கூட்டம் NDA கூட்டணிக்கு அச்சாணியாக இருக்கும் எனவும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்தடுத்த வியூகங்கள்இ.பி.எஸ். வீட்டில் விருந்தை முடித்த கையோடு நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்கு சென்ற பியூஷ் கோயலை, தமிழ் மாநில காங்கிரஸின் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். பியூஷ் கோயலை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், என்.டி.ஏ. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என தானாகவே ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார். இந்த நிலையில், திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சி தலைவர்கள் அனைவரும் மோடியின் பொதுக்கூட்ட மேடையில் திமுகவை விமர்சித்து பேசுவார்கள் என கூறப்படுகிறது. மேலும், பிரதமர் வருகைக்கு பிறகு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்தடுத்த வியூகங்கள் தேர்தல் களத்தை இன்னும் சுவாரசியமாக்கும் என எதிர்பார்க்கலாம். Related Link "தேர்தல் சீசன் வந்தால் மட்டுமே பிரதமர் வருகை"