Also Watch
Read this
இடைத்தேர்தல்ல பாமகவுக்கான டிமாண்ட் எகிறி உச்சத்துல இருக்காம், இடைத்தேர்தல்ல அதிமுகவுக்கு நோ சொன்ன அன்புமணியை தவெகவும், திமுகவும் மதுராந்தகத்தை மனசுல வெச்சு துரத்திக்கிட்டிருக்காம்.
இடைத்தேர்தல்ல அதிமுகவுக்கு ஆதரவு இல்லைங்கறதை அன்புமணி வேற வேற மொழிகள்ல எடப்பாடிகிட்டேயே சொல்லிட்டாராம், கட்சிக்காரங்களோட கலந்து பேசிட்டு சொல்றேன்னு முதல்ல சொன்ன அன்புமணி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக மேல கூட்டணி மற்றும் தேர்தல் களப்பணிகள்ல கருத்து வேறுபாடு இருக்குன்னு இபிஎஸ்கிட்ட எண்ட் கார்டே போட்டுட்டாராம்.

பாமகவுக்கு அதிமுக மேல இருக்கற ஆத்திரத்துக்கு முக்கிய காரணம் என்னன்னா திருப்போரூர், பென்னாகரம், போளூர், மயிலாடுதுறைன்னு பல முக்கிய தொகுதிகள்ல பாமக ஜெயிச்சிருக்க வேண்டியதை அதிமுகவோட ஒத்துழைப்பு இல்லாததால கைநழுவிப் போனதா நினைக்குதாம்.

இன்னொரு பக்கம் தவெக சார்பா மூன்று முறை அன்புமணி கிட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்குன்னு சொல்றாங்க, திமுகவும் அன்புமணிகிட்ட ஆதரவை கேட்டுக்கிட்டிருக்காம்.

ஆனா யாருக்குமே ஆதரவு தராம, தேர்தலை புறக்கணிக்கலாம்ங்கற முடிவுல அன்புமணி இருக்காராம். ஆனாலும் தவெக தரப்புல இருந்து ஆதரவு கேட்டு இன்னும் கூட பாமகவுக்கு அழுத்தம் வந்துக்கிட்டுதான் இருக்காம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved