Also Watch
Read this
2026 ஐபிஎல் தொடரில், இந்த முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களிடையே எழுந்து உள்ளது.
அசத்தலான ஆட்டம்
ரசிகர்களை கவர்ந்த RCB அணி, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்து உள்ளது. குறிப்பாக, கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்து உள்ளது. 12 போட்டிகளில் 8 வெற்றிகள், 16 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள RCB,
விராட் கோலி மற்றும் பில் சால்டீன், அதிரடி ஆட்டமும் அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. அவருக்கு துணையாக ஜேக்கப் பெத்தல், ரஜத் படிதார், டிம் டேவிட் ஆகியோரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல முக்கியமான வெற்றிகளை ஆர்சிபிக்கு பெற்று கொடுத்து உள்ளனர். ஜோஷ் ஹேஸல்வுட், யஷ் தயால், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அசத்தலான பந்து வீச்சால், எதிரணி பேட்ஸ்மேன்களை திணற வைத்தனர்.

ரசிகர்களின் நம்பிக்கை
சமீபத்தில் நடந்த போட்டிகளில் Chennai Super Kings, Mumbai Indians மற்றும் Kolkata Knight Riders போன்ற பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய ஆர்சிபி அணி, தொடர்ச்சியான வெற்றிகளால், ரசிகர்களின் நம்பிக்கையை, பல மடங்கு உயர்த்தியுள்ளது.

அடுத்தடுத்த லீக் போட்டிகளில்..
Punjab Kings மற்றும் Sunrisers Hyderabad அணிகளை எதிர்கொள்ள உள்ள ஆர்சிபி அணி, இந்த போட்டிகளிலும் வெற்றி பெற்றால், நேரடியாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிக அதிகம். சென்ற முறை வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்ற RCB அணி, இம்முறையும் வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

“Ee Sala Cup Namde”
இந்த முறை ரசிகர்களின் பிரபலமான முழக்கம் “Ee Sala Cup Namde” உண்மை ஆகுமா? ஆர்சிபியின் வரலாற்றின் மீண்டும் ஒரு கோப்பை சேரும் ஆண்டாக இந்தாண்டு அமையுமா? இதற்கான பதில், வரவிருக்கும் போட்டிகளில் தெரியும். மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved