டெல்லியை குப்பைக்கிடங்காக மாற்றியது தான் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் சாதனை என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். டெல்லியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சட்டவிரோத வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்கள் குடியேற ஆம் ஆத்மி அரசு உதவியதாக குற்றம் சாட்டினார்.