news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews இ.பி.எஸ்.ஸின் இயல்பான பேச்சு சமூக ஊடகங்களில் வைரல்
tv

Also Watch

tv

Read this

இ.பி.எஸ்.ஸின் இயல்பான பேச்சு சமூக ஊடகங்களில் வைரல்

EPS Campaign

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

சமூக ஊடகங்களில் வைரல் : 

அடுக்குமொழிப் பேச்சு, வர்ணனை எதுவும் இல்லாமல் மக்கள் மொழியில், இயல்பாகப் பேசி உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்கும் இபிஎஸ் பேச்சுக்கு மக்களிடையே அபார வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசி முடிக்கும் முன்னரே, சுடச்சுட பதிலடி கொடுத்தும் அசர வைக்கிறார்.

அதனால் இபிஎஸ் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். அவரது பேச்சில் கிண்டல், கேலி, ஆவேசம், சவால் என்று அனல் பறக்கிறது. ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் இபிஎஸ் எழுச்சிப்பயணத்தில் அன்றாடம் மக்களின் குறைகளைக் கேட்டு.

மாலையில் பேசி கை தட்டல் வாங்கினார். இப்போது ஆளும் கட்சி செய்த ஊழல்களை ஆதாரத்தோடு பட்டியலிடுகிறார். குறிப்பாக செந்தில்பாலாஜி, கே.என்.நேரு ஊழல்களை தெளிவாக மக்களுக்கு அம்பலப்படுத்துகிறார்.
இபிஎஸ் பேச்சின் ஹைலைட் என்றால்.

திமுகவின் போதை கலாச்சாரத்தின் ஆபத்தை புரிய வைப்பதுதான். திமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை முதல் பாட்டி வரை பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பேசுகிறார்.

கோவை மாணவி, 2 வயதுக் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமைகளை சுட்டிக் காட்டுகிறார். நாள்தோறும் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்குக் காரணம் கஞ்சா விற்பனை என்பதை அழுத்தம் திருத்தமாக பெண்கள் மனதில் பதிய வைக்கிறார்.

நம் குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் கஞ்சாவுக்கு அடிமையாகிறார்கள். திமுகவினரே விற்பனை செய்வதால் காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்.

இந்த வாக்குறுதி ஒவ்வொரு பெற்றோரின் மனதையும் குளிர வைத்திருக்கிறது. இபிஎஸ் சொன்னதைச் செய்வார் என்று பேசிக்கொள்கிறார்கள். மாணவர்கள் மீது அக்கறை இருந்த காரணத்தாலே 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவந்தார், கொரோனா காலத்தில் ஆல் பாஸ் போட்டார்.

தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தார் என்று மக்களே இபிஎஸ் சாதனைகளைப் பட்டியல் போடுகிறார்கள்.நானும் ஒரு விவசாயி, சாதாரண நிலையில் இருந்து உயர்ந்து இருக்கிறேன், திமுகவில் யாராவது இப்படி வர முடியுமா என்று கேட்பதை எதிர்க்கட்சியினரும் வரவேற்கிறார்கள்.

விவசாயிகளுக்கு அவர் செய்த நன்மைகளைப் பட்டியலிடுகிறார். இது விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களிடையேயும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

அதோடு அதிமுக தேர்தல் அறிக்கையில் அவர் அளித்த வாக்குறுதிகள் குறிப்பாக திமுகவினரின் ஆட்சியினால் அவதிப்படும் மக்களை மீட்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்படும் என்பதையும் அனைத்து பெண்களுக்கும் மாதம் 2 ஆயிரம் கிடைக்கும் என்றும் பிரிட்ஜ் கொடுக்கப்படும் என்று இபிஎஸ் பேசும்போது விசில் பறக்கிறது.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் பொதுமக்கள் மத்தியில் தன்னுடைய பேச்சு மூலமே கொண்டுபோய் சேர்த்துவிட்டார். திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, ஆ.ராசா போன்றோர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக சார்பில் ஒற்றை ஆளாக நின்று திமுகவை எதிர்த்து பந்தாடி வருகிறார். பாஜகவை காட்டி பூச்சாண்டி செய்து வரும் திமுகவின் முகத்திரையைக் கிழித்துவருகிறார்.

இபிஎஸ் பேசிய பிறகு பால்டாயில் என்பது வைரலாகியது. அதேபோல் 10 ரூபாய் என்றாலே பாலாஜி என்று மக்கள் குரல் கொடுக்கிறார்கள். இபிஎஸ் மறந்தாலும் மக்கள் மறக்காமல் 10 ரூபாய் என்றும் பால்டாயில் என்றும் குரல் கொடுக்கிறார்கள்.

அதோடு கருணாநிதி வாய்பாயுடன் இருக்கும் புகைப்படத்தையும், மோடி நல்லவர் என்று கருணாநிதி கொடுத்த பேட்டியையும் ஆதாரத்துடன் காட்டி திமுகவை அலறவிடுகிறார். இறுதியாக பை பை ஸ்டாலின் என்று மட்டும் சொல்லிவந்த இபிஎஸ் இப்போது பஞ்ச் டயலாக்காக, ‘அதிமுக வின்னிங்… நல்லாட்சி கம்மிங்’ என்று முடிப்பதும் மக்கள் நெஞ்சைத் தொட்டிருக்கிறது.

Related Link
பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
40 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved