news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு
tv

Also Watch

tv

Read this

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

கிருஷ்ணகிரியில் ஸ்டாலின்

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் பிரதமர் மோடி தோல்வி அடைந்து உள்ளதாகவும், நாடாளுமன்றத்திலேயே அவரை நிலைகுலைய வைத்துள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவை தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் அது பாஜகவுக்கு போடும் வாக்கு என விமர்சித்த முதலமைச்சர், தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவது தான் பாஜகவின் அஜெண்டா என்றும் சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் தான் எனவும் காட்டமாக கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் ஸ்டாலின்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, பிரதமர் மோடியால் ஸ்டாலினை கண்ரோல் செய்ய முடியாது என்றார். நானும் ராகுல் காந்தியும் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து வெற்றியை உறுதிப்படுத்தி வருகிறோம்.

கிரிக்கெட் பார்ப்பது தவறல்ல
காரில், நான் கிரிக்டெ் பார்த்தது தப்பு என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். முதலமைச்சர் கிரிக்கெட் பார்ப்பது தப்பு இல்லை, ஆனால் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினாரே அதுதான் தவறு.

தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேச வேண்டிதை அரசு நிகழ்வில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். அவருடைய பேச்சு, தேர்தல் விதிகளை மீறியதாக உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை நாங்கள் தடுப்பதாக அபாண்டமாக சொல்கின்றனர். என்டிஏ கூட்டணி ஏப்ரல் 17ஆம் தேதியுடன் காலியாகி விட்டது.

200 தொகுதிகளில் வெற்றி
தொகுதி வரையறை சட்ட மசோதாவால், நாடாளுமன்றத்தை நிலைகுலைய வைத்துள்ளோம். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சென்றுள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். திமுக தவிர மற்றவர்களுக்கு போடுகிற ஓட்டு பாஜவிற்கு போடுகிற ஓட்டாக மாறும்.
இவ்வாறு பேசி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Related Link
தாலி கட்டிய கையோடு விஜய்யிடம் ஆசி வாங்கிய மணமக்கள்

தாலி கட்டிய கையோடு விஜய்யிடம் ஆசி வாங்கிய மணமக்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
6 hrs 23 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau