news-tamil-logo

3/22/2026, 11:23:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home sport ருத்ரதாண்டவமாடிய கோலி... இந்திய அணி 176 ரன்கள் குவிப்பு.. பைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு!
tv

Also Watch

tv

Read this

ருத்ரதாண்டவமாடிய கோலி... இந்திய அணி 176 ரன்கள் குவிப்பு.. பைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு!

ருத்ரதாண்டவமாடிய கோலி

Posted on: Aug 07, 2024 12:09 PM

4

By: Rakesh Sharma

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
GettyImages-2158479718_1

ருத்ரதாண்டவமாடிய கோலி... இந்திய அணி 176 ரன்கள் குவிப்பு.. பைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு! 

பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் பார்படாஸில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினார்கள்.

இந்த தொடர் முழுவதும் பார்ம் இல்லாமல் தவித்த விராட் கோலி முதல் இரண்டு பந்திலும் பெளண்டரி அடித்து அசத்தினார். முதல் ஓவரில் இந்திய அணி 15 ரன் எடுத்தது. ஆனால் 2வது ஓவரில் 2 பெளண்டரி விளாசிய கேப்டன் ரோகித் சர்மா 9 ரன் எடுத்து மகாராஜ் பந்தில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். பின்பு சூர்யகுமார் யாதவும் 3 ரன்னில் ரபடா பந்தில் அவுட் ஆனதால் இந்தியா 4 ஓவரில் 34/3 என தடுமாறியது. ஆனால் மறுபக்கம் விராட் கோலி நிலையாக விளையாடினார். அவருக்கு அக்சர் படேல் ஒத்துழைப்பு கொடுத்தார்.

அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 4 சிக்சர்களுடன் 31 பந்தில் 47 ரன்கள் எடுத்து துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். மறுபக்கம் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி சூப்பர் அரைசதம் (59 பந்தில் 76 ரன்கள்) விளாசி அவுட் ஆனார். இந்த தொடர் முழுவதும் மோசமாக விளையாடிய அவர் இறுதிப்போட்டியில் ஜொலித்துள்ளார். இதில் 7 பெளண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும். 

ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 16 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் குவித்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
9 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved