news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விரைவில் 3 வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக நியமனம்?
tv

Also Watch

tv

Read this

விரைவில் 3 வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக நியமனம்?

கேப்டனாக செயல்படும் கில்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கில்

டெஸ்ட்,ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படும் கில்

சுப்மன் கில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில், விரைவில் டி-20 உட்பட மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்க இந்திய அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி இழந்த நிலையில், டி-20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அடுத்து வரும் ஜிம்பாப்வே தொடரையும் இந்திய அணி இழந்தால் அவரின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என பேசப்பட்டு வருகிறது.

"ரோஹித் சர்மா ஓய்வா? எங்களிடம் சொல்லவில்லை" 

ஓய்வு பெறுவது குறித்து ரோஹித் சர்மா தங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ரோஹித் சர்மாவுடன் பேசுவதற்கு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்து தங்களிடம் அவர் எதுவும் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இவை அனைத்தும் ஊடகங்களில் மட்டுமே வரும் செய்தி என நினைப்பதாகவும், அவர் ஓய்வு பெறுவது தொடர்பாக இந்திய அணியில் எந்தவொரு ஆலோசனையும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்வாலின் எதிர்காலம் 

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் எதிர்காலம் குறித்து தாம் கவலைப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் எதிர்காலம் குறித்து இந்திய அணி நிர்வாகம் தெளிவாக இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

அணியின் தலைமை பயிற்சியாளர், கேப்டன் மற்றும் அணி தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான திட்டமிடலில் தெளிவாக இருக்க வேண்டும் எனவும், அணியின் திட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கும்பட்சத்தில், அவரை போதுமான அளவுக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடவைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Link
ஸ்பெயினில் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சிறுவன் பலி

ஸ்பெயினில் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சிறுவன் பலி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வயர்மேன் கைது

0
5 mins agoshare
வயர்மேன் கைது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau