news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஸ்பெயினில் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சிறுவன் பலி
tv

Also Watch

ஸ்பெயினில் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சிறுவன் பலி

உலகக் கோப்பை கால்பந்து

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Spain

செயற்கை நீரூற்று இடிந்து விழுந்ததில் சிக்கி பலரும் காயம் 

ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தின் போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகக் கோப்பை கால்பந்துபோட்டியில் ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

இதையடுத்து, அந்நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த சூழலில், சுயூடாட் ரோட்ரிகோ நகரில் நடைபெற்ற வெற்றியைக் கொண்டாட்டத்தின்போது நீரூற்று ஒன்று சரிந்து விழுந்ததில் சிறுவன் பலியானான். இந்த நிகழ்வில் பலரும் காயமடைந்தனர். அரசு சார்பில் இரங்கலும் வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 44.4 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 44.1 ஓவர்களில் இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 80 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஜிம்பாப்வேயின் ஹராரேவை சென்றடைந்த இந்திய அணி 

ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி அந்நாட்டுக்கு சென்றடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதியும், 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரவி பிஸ்னோய் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், இந்திய அணி சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் தோல்வியடைந்ததால், ஜிம்பாப்வே தொடரிலாவது வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Related Link
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved