Also Watch
Read this
By: Manigandan Raja

முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் வலியுறுத்தல்
வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர் 3 பார்மேட்டிலும் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய உள்நாட்டு தொடர்களில் சிகப்புப் பந்து போட்டிகளில் விளையாடி தனது திறனை மேலும் அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடர்
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 101 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் கிரீன் 51 ரன்களுடனும், நாதன் லயன் 10 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தை விட 101 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுக்கொலை
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டின் முன்பு காரில் காத்திருந்தபோது மர்ம நபர்கள் அவரை சுட்ட நிலையில், அவருடன் இருந்த பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved