Also Watch
Read this
By: Web Team

கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், கீழடி அகழ்வாராய்ச்சிகள் குறித்து சர்வதேச ஆய்வக ஆதாரத்தை கொடுத்தாலும் மத்திய அரசு கூடுதல் ஆதாரம் கேட்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆதாரம் இல்லாமலேயே சரஸ்வதி நாகரீகத்தை ஏற்றுக் கொள்ளும் பாஜக அரசு, அனைத்து ஆதாரங்கள் இருந்தும் தமிழ் கலாச்சாரத்தை ஏற்க மறுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். அதோடு, கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையை பொறுத்தவரை, பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல எனவும், கீழடி காட்டும் உண்மை அவர்கள் முன்னெடுக்கும் ஸ்க்ரிப்டுக்கு எதிரானதாக இருப்பதால்தான் எனவும் தெரிவித்துள்ளார்.
3
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved