news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்த மாதத்தில் ரஷ்யா - உக்ரைனுடன் புதிய சுற்று பேச்சுவார்த்தை
tv

Also Watch

இந்த மாதத்தில் ரஷ்யா - உக்ரைனுடன் புதிய சுற்று பேச்சுவார்த்தை

அதிபர் ஜெலன்ஸ்கி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ukrine war

அமெரிக்கா விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

  • இந்த மாதத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் முன்வைத்துள்ள இந்த காலக்கெடுவிற்கு உக்ரைன் தரப்பு தயாராக உள்ளதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
  • இந்த பேச்சுவார்த்தையை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது அமெரிக்கா பரிந்துரைக்கும் வேறொரு நாட்டில் நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவும் இந்த பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளது.

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பிரம்மாண்ட தாக்குதல்

  • ஹௌதி கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள இடங்களை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஏமன் அரசு படைகள் ஒரு புதிய மற்றும் பிரம்மாண்டமான தரைவழி தாக்குதலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.
  • ஹௌதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் மீட்டு ஏமனை விடுவிக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகளும், ஹௌதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளான சனா மற்றும் சாடா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.

மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மியன்மார் குடியேறிகள்

  • ஐ.நா. பாதுகாப்பு எச்சரிக்கையையும் மீறி, மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் ஆயிரத்து 500 மியான்மர் நாட்டினர் யாங்கோன் நகரைச் சென்றடைந்துள்ளனர்.
  • மியான்மரில் உள்நாட்டு மோதல்கள் தீவிரமாக நிலவி வரும் சூழலில், அங்குள்ள மக்களைப் பாதுகாப்பற்ற பகுதிக்குத் திருப்பி அனுப்புவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Link
இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் விமானியின் பின்னணி என்ன?

இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் விமானியின் பின்னணி என்ன?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் உச்சவரம்பு அதிகரிப்பு

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved