செயற்கை நுண்ணறிவில் இயங்கும் என கூறி அறிமுகப்படுத்தப்பட்ட ரஷ்யாவின் முதலாவது மனித வடிவிலான ரோபோ, அறிமுக விழாவிலேயே மேடையில் சரிந்து விழுந்தது. இந்த காட்சி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.Aldol என பெயரிடப்பட்ட இந்த மனித ரோபோ திங்கள் கிழமை மாஸ்கோவில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் பொது மக்கள் முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் நிதானமாக நடந்து வந்த இந்த ரோபோ சில வினாடிகளில் தடுமாறி மேடையில் விழுந்து பல துண்டுகளானது. இந்த தர்மசங்கடமான நிலையை மறைக்க பணியாளர்கள் கறுப்பு திரையை கொண்டு மூடும் காட்சியும் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.