Also Watch
Read this
By: Web Team

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபா் புதின் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆரெஷ்னிக் ஏவுகணைகள் ராணுவப் பணியில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் புதின் கூறினார்.
ரஷ்யா வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டருடன் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் செய்தியாளா்களை சந்தித்த புதின், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் ஆரெஷ்னிக் ஏவுகணை பாயும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved