Also Watch
Read this
By: Manigandan Raja

தேர்வுகள் ரத்து :
போர் காரணமாக பல மேற்காசிய நாடுகளில் நடக்கவிருந்த பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ரத்து செய்து விட்டது.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை, பஹ்ரைன்,ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்தி வைக்கப்படுவதாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. போர் காரணமாக பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved