Also Watch
Read this
By: Web Team

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனாவுக்கு டாக்காவில் உள்ள சர்வதேச குற்றங்களுக்கான தீர்ப்பாயம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அவரது அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவின் ஷகீல் அகண்ட் பாபுல் என்பவருடன் ஷேக் ஹஸீனா நடத்திய தொலைபேசி உரையாடலில், தம் மீது 227 வழக்குகள் பதிவு செய்யப்படதாகவும், எனவே தாம் 227 பேரை கொல்ல லைசன்ஸ் பெற்றதாகவும் ஷேக் ஹஸீனா கூறியதன் அடிப்படையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
வங்க தேசத்தில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், அதை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஷேக் ஹஸீனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved