இந்தியா-கனடா இடையிலான விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்துக்கான 5-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று ஒட்டாவாவில் தொடங்குகிறது. இரு நாடுகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்கும் இந்த பேச்சு, அக்டோபர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சுங்க வரி குறைப்பு, முதலீடு மற்றும் திறன்மிக்க பணியாளர்களுக்கான விதிகள் உள்ளிட்டவை பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளன.
மாணவர் போராட்டத்தால் பிரான்ஸில் 500 பள்ளிகள் மூடல்
பிரான்ஸில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, இன்று சுமார் 400 முதல் 500 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை, மோசமான பள்ளி கட்டமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.