Also Watch
Read this
By: Web Team

பிற நாடுகளை கட்டாயமாக பணிய வைப்பதற்காக வர்த்தக வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் பயன்படுத்தினால் அதை கடுமையாக எதிர்ப்போம் என சீனா தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் இதை தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம்,வரிகளை உயரத்துவேன் என மிரட்டுவதால் டிரம்புக்கு எந்த பயனும் கிடைக்காது என திட்டவட்டமாக தெரிவித்த து.
அரசியல் லாபத்திற்காக அதிபர் டிரம்ப் இது போன்ற மிரட்டல்களை விடுவதாகவும் அது எந்த நாட்டையும் பாதிக்காது எனவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாக உள்ள பிரேசில், ரஷ்யா,இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், டாலரை புறக்கணித்தால், அவற்றின் மீது கூடுதலாக பத்து சதவிகித வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் பூச்சாண்டியை கண்டு அஞ்ச மாட்டோம் எனவும் சீனா தெளிவு படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved