Also Watch
Read this
By: Web Team

துருக்கியில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் போர்க் கைதிகளை விடுவிக்க ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்டன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்த அமெரிக்க முயற்சி வரும் நிலையில், அந்நாடுகளின் முக்கிய அதிகாரிகள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் 3 ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் போர் நிறுத்தத்திற்கான சாத்திய கூறுகளில் இழுபறி நீடிப்பதாக கூறிய ரஷ்யா பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி, இருதரப்பினரும் தாங்கள் சிறைப்பிடித்த பிணைக் கைதிகளை விடுவிக்கு ஒப்புக்கொண்டதாக கூறினார்.
அதன்படி இரு நாடுகளும் தலா 1200 போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாகவும், கொல்லப்பட்ட 3 ஆயிரம் வீரர்களின் உடல்களை ஒப்படைக்க ரஷ்யா முன்வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved