news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும்
tv

Also Watch

அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும்

ஈரான் தீவிரமாக முயற்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph 1

ஈரானால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது

நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலுக்குப் பிறகு ஈரான் விவகாரம் உடனடியாக முடிவுக்கு வரும் என்று தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானால் இதற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாக்குப்பிடிக்க முடியாது என்றும், அமெரிக்கத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி, தங்களுக்குச் சாதகமான ஜனநாயகக் கட்சியினரை ஆட்சிக்குக் கொண்டு வர ஈரான் தீவிரமாக முயற்சிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அதன் மூலமாகத் தங்கள் மீதான பிடியைத் தளர்த்திக் கொண்டு அணு ஆயுதங்களை உருவாக்க ஈரான் திட்டமிடுவதாகவும் சாடினார்.

WHO பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனாவின் மகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசெத் ((Saima Wazed)) உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். 2024ல் பொறுப்பேற்ற சைமா வாசெத் மீது ஊழல், மோசடி மற்றும் தவறான கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததாக ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த சைமா,பணி செய்யவிடாமல் தன்னைத் தடுத்ததால் WHO தலைமை மீது முழு நம்பிக்கையையும் இழந்துவிட்டதாகவும், ஓராண்டாக ஊதியம் இல்லாததால் நிதிநிலை மோசமடைந்துள்ளதாக தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி

பிலிப்பைன்ஸின் பலவான் ((Palawan))மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோரோன் ((Coron)) அருகே பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மணிலாவிலிருந்து 134 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உடன் புறப்பட்ட அந்த படகு கோரோன் நகரின் மார்சில்லா ((Barangay Marcilla)) பகுதிக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. 42 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Link
மறைந்த நார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச்சடங்கு

மறைந்த நார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச்சடங்கு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா ஏ அணி அறிவிப்பு: ஹர்திக் பாண்டியா சேர்ப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved