Also Watch
Read this
By: Web Team

சவுதி அரேபியால் வசிக்கும் முஸ்லீம் அல்லாத வெளிநாட்டவர் மதுபானங்களை வாங்க அனுமதி அளித்துள்ள அரசு ஆனால் அவர்கள் குறைந்தது 12 லட்ச ரூபாய் மாத சம்பளம் வாங்கினால் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படுவர் என நிபந்தனை விதித்துள்ளது. சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் இருக்கும் நாட்டின் ஒரே ஒரு மதுக்கடையில், தங்களது சம்பள சான்றிதழை காட்டி முஸ்லீம் அல்லாத வெளிநாட்டவர் மதுவை வாங்கலாம் என சவூதி அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மதுக்கடை கடந்த ஆண்டு வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பட்டத்து இளவரசரான முகம்மது பிற் சுல்தான் அதிகாரத்துக்கு வந்த பிறகு சவூதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டங்கள் ஒவ்வொன்றாக காற்றில் பறக்க விடப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved