Also Watch
Read this
By: Web Team

வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக 14 நாடுகளுக்கான உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் நெருங்கி விட்டதாக கூறினார்.
உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பின் போது வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக 14 நாடுகளுக்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக கூறிய டிரம்ப், அமெரிக்க விதிமுறைகளை பூர்த்தி செய்ய விரும்பாத பிற நாடுகள் புதிய வரி அறிவிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved