Also Watch
Read this
By: Web Team

நாட்டின் நலனுக்கே முக்கியத்துவம் என்பதால், காலக்கெடு அடிப்படையில் இந்தியா ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் என்பது இரு நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், இந்தியாவின் நலனை உறுதிசெய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும் எனவும், பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட காலக்கெடு அல்லது அழுத்தங்களின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம் என திட்டவட்டமாக பியுஷ் கோயல் கூறியுள்ளார்.
ஜூலை 9-க்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved