சென்னை

அதிமுக பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த ஓபிஎஸுக்கு தடை தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அப்பீல்: வெள்ளிக்கிழமை விசாரணை

அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அப்பீல் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பில் முறையிடப்பட்டது.

இதனையேற்றுக் கொண்ட நீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

அதிமுக பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த ஓபிஎஸுக்கு தடை   தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அப்பீல்: வெள்ளிக்கிழமை விசாரணை

00 Comments

Leave a comment