சினிமா

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எக்ஸ் தளத்தில் அறிவிப்பு

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எக்ஸ் தளத்தில் அறிவிப்பு

 

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா- இமை போல் காக்க திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் ஐசரி கணேஷின் மருமகன் வருண் நடித்துள்ள இந்த படத்தின் பணிகள் அனைத்தும் கடந்த 2019ஆம் ஆண்டே நிறைவடைந்த போதும், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜோஷ்வா படம் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார். இதே போல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

00 Comments

Leave a comment