தமிழ்நாடு

பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து பயணிகள் அவதி

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால்
நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை - தீபாவளிக்காக குடும்பத்துடன் துணி எடுக்க
வந்தவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் கரூரில் கடைவீதிகளில் கூட்டம்
அதிகளவில் காணப்படுகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் அதிகளவில்
இயக்கப்பட்டதால் பெரும்பாலானோர் கரூர் வருகை தந்து விட்டனர்.

மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள்
புத்தாடைகள் வாங்க கரூர் நகருக்கு வருகை தந்துள்ளனர். மாலை நேரம் ஆக ஆக
கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது இவர்கள் திரும்பிச் செல்ல நகர
பேருந்துகள் குறைவாக உள்ளதால் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல பேருந்துகள்
இல்லாமல் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போது, உள்
மாவட்டங்களுக்கு செல்ல நகர பேருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


பசுபதிபாளையத்தை சார்ந்த மணிவேல் (வயது 40) தனது தாய், மனைவி, மகன், மகளுடன்
புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பேருந்தில் கரூர் பேருந்து நிலையத்திற்கு
வந்துள்ளார். அவரை பேருந்து நிலையத்தில் இருக்கையில் அமர வைத்து விட்டு
மற்றவர்கள் கடைவீதிக்கு சென்று விட்டனர். அப்போது, அவருக்கு மூச்சு திணறல்
ஏற்பட்டும், வலிப்பு ஏற்பட்டும் இருக்கையிலிருந்து கீழே சரிந்து விழுந்து
விட்டார்.

அருகில் இருந்தவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்துள்ளனர். அவர்
எழுந்தரிக்கவே இல்லை. இதனையடுத்து அருகில் இருந்தவர்களே 108 ஆம்புலன்ஸிற்கும்,
பேருந்து நிலையத்தில் உள்ள புறக் காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தகவல்
தெரிவித்தனர். அப்போது, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை
பரிசோதித்து விட்டி அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி விட்டுச் சென்று
விட்டனர். இதனை தொடர்ந்து அவரது செல்போன் ஒலித்துள்ளது. அதன் மூலம் அவரது
குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

பின்பு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக
கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை  பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து பயணிகள் அவதி

00 Comments

Leave a comment