தமிழ்நாடு

சென்னையில் தனியார் கட்டுமான திட்ட நிறுவனத்தில் சோதனை

சென்னையில் தனியார் கட்டுமான திட்ட நிறுவனத்தில் சோதனை

சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவரின் பிளானிங் நிறுவனத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட வருமானவரித் துறையினர், 2 பெட்டிகள் மற்றும் பைகளை எடுத்துச் சென்றனர். சென்னை அசோக்நகரில் இயங்கி வரும் குருமூர்த்தி இன்ஜினியரிங் என்டர்பிரைசஸ் மற்றும் தியாகராஜன் எண்டர்பிரைசஸ் பிளானிங் டிசைனிங் அண்ட் எஸ்டிமேட் எனும் நிறுவனம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையின் மூலம் அரசு கட்டுமான பணிகளுக்கான திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் இரவு முதல் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர், உரிமையாளர் தியாகராஜனிடமும் விசாரணை மேற்கொண்டனர். 2016-ல் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது, அவருடன் தியாகராஜன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment