news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆண் குழந்தை ரூ.30,000..!
tv

Also Watch

ஆண் குழந்தை ரூ.30,000..!

திருவாரூர்

71

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvr 2(3)

திருவாரூர் அருகே பிறந்த ஆண் குழந்தையை 30,000 ரூபாக்கு விற்ற தாய் உட்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 14ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தை
அத்திக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன், ஜன்னத் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ஜன்னத் கர்ப்பமாகி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு அங்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தடுப்பூசி செலுத்த சென்ற செவிலியர்
குழந்தை பிறந்த நிலையில் மருத்துவர்கள் கடந்த வாரம் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக செவிலியர் ஒருவர் ஜன்னத் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

குழந்தை எங்கே என கேட்ட செவிலியர்
அப்போது குழந்தை எங்கே என்று செவிலியர் ஜன்னத்திலும் கேட்ட பொழுது ஜன்னத் முன்னுக்கு பின்னாக பதில் அளித்து குழந்தை இங்கே இல்லை உறவினர் வீட்டில் உள்ளார் என கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த செவிலியர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.

குழந்தையை ரூ.30,000 விற்ற கொடூர தாய்
தகவலின் அடிப்படையில் திருவிடைவாசல் கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை ஜன்னத் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்ற பெண்ணிடம் 30 ஆயிரம் ரூபாயை பெற்று கொண்டு விற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் குழந்தையை விற்ற குழந்தையின் தாய் ஜன்னத் மற்றும் குழந்தையை வாங்கிய உமாமகேஸ்வரி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Link
மழை வந்து ஒன்னும் இல்லாமல் ஆக்கிடுச்சு....

மழை வந்து ஒன்னும் இல்லாமல் ஆக்கிடுச்சு....

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இது சட்டசபையா, சண்டை சபையா? பிரேமலதா கேள்வி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved