தமிழ்நாடு

மகளே இனி இல்லை.!. தகப்பன் எப்படி தாங்குவான்? கண்கள் கலங்கி பேசிய பிரபலங்கள்..! | Vijay Antony

விஜய் ஆண்டனியின் மகள் இறந்த அதிர்ச்சி தகவலை அறிந்து அவரது வீட்டிற்கு திரைபிரலங்கள் பலர் வந்து மீராவிற்கு அஞ்சலி செலுத்தினர்.. அந்தவகையில் தள்ளாத வயதிலும் மீரா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக கைதாங்கலாக வந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, எல்லாவித சக்திகளையும் கொண்ட ஒரு கலைஞன் விஜய் ஆண்டனி, அவருக்கு இப்படி ஒரு இழப்பா என பேச முடியாமல் கலங்கி போனார்..

மீரா உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி, விஜய் ஆண்டனியின் குடும்பம் என் குடும்பம் மாதிரிதான், அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என வருத்தம் தெரிவித்தார்.

விஜய் ஆண்டனி வீட்டுக்கு நான் எப்போது வந்தாலும் மீரா பாப்பா சிரித்த முகத்துடனேயே இருப்பார் என கவலை தோய்ந்த முகத்தில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியின் உலகமே அவரது வீடும் குடும்பமும்தான் என்றார்.

அன்பு தம்பி விஜய் ஆண்டனிக்கு கடவுள் தைரியத்தை கொடுக்க வேண்டும் என குரல் உடைந்து பேசிய நடிகர் சத்யராஜ் ஒருவருக்கு இதைவிட வேறு துயரம் இருக்கவே முடியாது என கவலை தெரிவித்தார்.

மகளுக்கு திருமணமாகி கணவன் வீட்டுக்கு போகும்போதே நம்மால் தாங்க முடியாது, மகளே நிரந்தரமாக இல்லையென்றால் எப்படி தாங்குவது? என கண்ணீர் ததும்ப பேசிய நடிகர் பார்த்திபன் தன்னால் நிறைய பேச முடியவில்லை என புறப்பட்டு சென்றார்..

00 Comments

Leave a comment