Also Watch
Read this
Posted on: Feb 18, 2026 11:59 AM
By: Fyrose Banu

25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள கூவம் ஆற்றில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூவம் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்
25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு மற்றும் உரிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகத்தின் (TNEB Headquarters) பின்புறம் அமைந்துள்ள கூவம் ஆற்றில் இறங்கி தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நீண்ட காலமாக இழுபறியில் உள்ள இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved