news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 49ஆண்டுக்கு பிறகு சாதித்த அரசுப்பள்ளி
tv

Also Watch

tv

Read this

49ஆண்டுக்கு பிறகு சாதித்த அரசுப்பள்ளி

திருவாரூர்

360

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvr main

2025-26ம் கல்வி ஆண்டுக்கான 14 வயதுக்குட்பட்ட 5 வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் ராணிப்பேட்டையில் கடந்த 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் 39 மாவட்டங்களிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் திருவாரூர் வ. சோ. அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பூப்பந்தாட்ட மாணவர்கள் அணி மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.



மாநில அளவில் முதலிடம்

இந்த நிலையில் இன்று காலை திருவாரூர் வருகை தந்த பூப்பந்தாட்ட குழுவினருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திருவாரூர் நகராட்சி அருகில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அப்போது பள்ளிக்குள் அந்த மாணவர்கள் நுழைந்ததும் இரு மருங்கிலும் காத்திருந்த சக மாணவர்கள் கர ஒலி எழுப்பி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் மேலும் மாணவர்களுக்கு பள்ளியின் வழிபாட்டுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பூரிப்படைந்த பள்ளி தலைமை ஆசிரியர்
இதில் மாநில அளவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், பரிசு கோப்பையையும் மாணவர்கள் ஒப்படைத்து வாழ்த்து பெற்றனர். அதன் பின்னர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தனித்தனியாக மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கினார்.

49ஆண்டுக்கு பிறகு சாதித்த அரசுப்பள்ளி
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் ஞானசேகரன் உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், ஹரி பிரதீப் ஆகியோரும் பாராட்டப்பட்டனர். 49ஆண்டுக்கு பிறகு மாநில அளவில் இப் பள்ளி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
ம.தி.மு.க 234 தொகுதியிலும் போட்டியிடும்

ம.தி.மு.க 234 தொகுதியிலும் போட்டியிடும்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுபள்ளியில் ரீல்ஸ் - தவெக நிர்வாகியை நீக்கிய விஜய்

1
2 mins agoshare
tvk action








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved