news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news AI - அறிவியல் வளர்ச்சியின் அடுத்த பாய்ச்சல்
tv

Also Watch

tv

Read this

AI - அறிவியல் வளர்ச்சியின் அடுத்த பாய்ச்சல்

மனித இனத்தின் நண்பனா? பகைவனா?

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இன்றைய தொழில்நுட்ப உலகில் மிகவும் பேசப்படும் ஒரு விஷயம் 'செயற்கை நுண்ணறிவு' அல்லது AI. இதன் மூலம் இன்று கிட்டத்தட்ட மனிதனைப் போலவே சிந்திக்கும் திறன் கொண்ட இயந்திரங்கள் உருவாகி வருகின்றன. இந்த AI என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?, இதன் பயன்கள் மற்றும் இதில் உள்ள பாதுகாப்பு சவால்கள் என்ன? என்பதை விளக்குகிறது இந்தச் சிறப்பு செய்தித் தொகுப்பு.

தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளும் AI தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு என்பது, மனிதன் தன் சிந்தனைகளை செயலாக மாற்றும் கால இடைவெளியை குறைப்பதற்கான தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட அறிவியலின் அடுத்த பாய்ச்சலாகும். இவை பரந்த அளவிலான தரவுகளை ஆய்வு செய்து, அவற்றிலிருந்து வடிவங்களைக் கண்டறிந்து, காலப்போக்கில் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்கின்றன. இன்று மொழியைப் புரிந்துகொள்வது முதல், சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பது மற்றும் புதிய உள்ளடக்கங்களை உருவாக்குவது வரை AIன் ஆதிக்கம் பரவி காணப்படுகிறது.

'பெரும் மொழி மாதிரிகள்'
AI தொழில்நுட்பத்தில் முக்கியமானவை 'பெரும் மொழி மாதிரிகள்' (LLMs). இவை மனிதர்களைப் போலவே மொழியைப் புரிந்துகொண்டு பதிலளிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக விளங்கும் 'உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு' (Generative AI), வெறும் தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், பயனரின் கட்டளைகளுக்கு ஏற்ப புதிய கட்டுரைகள், இசை, படங்கள் மற்றும் தத்ரூபமான வீடியோக்களையும் உருவாக்குகிறது.

செயல் அமைப்பு முறைகள்
வங்கித் துறையில் மோசடிகளைக் கண்டறிவது முதல், விவசாயம் மற்றும் மருத்துவத் துறையில் துல்லியமான நோய் கண்டறிதல் வரை AI பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் அல்காரிதம் எனப்படும் அமைப்பு முறைகள் முக்கிய பங்காற்றுகின்றன.

வருங்காலத்திற்கு ஏற்றது
AI அமைப்புகள் தவறான அல்லது பாரபட்சமான தகவல்களை வெளியிடுவதைத் தடுக்க 'பாதுகாப்பு வரம்புகள்' (Guardrails) உருவாக்கப்படுகின்றன. இவை தொழில்நுட்பம் மனித விழுமியங்களுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டு இருப்பதை உறுதி செய்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் வியக்க வைத்தாலும், அதைச் சரியான பாதுகாப்பு விதிமுறைகளுடன் கையாள்வதே வருங்காலத்திற்குச் சிறந்தது என்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள்.

Related Link
2026 இந்தியா AI இம்பேக்ட் உச்சிமாநாடு

2026 இந்தியா AI இம்பேக்ட் உச்சிமாநாடு

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 37 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved