தமிழ்நாடு

பாரா ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டும் நியமிக்கப்படாத பயிற்சியாளர்..வஞ்சிக்கப்படுகிறதா கபடி?ParaOlympic

மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான கபடி புறக்கணிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மயிலாடுதுறை நகரின் மைய பகுதியான ராஜன் தோட்டத்தில் சாய் என்ற இந்திய விளையாட்டு மேம்பாட்டு பயிற்சி மையம் தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிப்பதற்காக தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் இருக்கும் போது, பாரா ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கபடி விளையாட்டிற்கு பயிற்சியாளர் இல்லாத காரணத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கபடி போட்டிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment