தமிழ்நாடு

பிள்ளையார்பட்டி பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை | Pillayarpatti Vinayagar Temple

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் உச்சி கால பூஜையை முன்னிட்டு, முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டையை மூலவருக்கு படையல் செய்து வழிபாடு செய்யப்பட்டது. 18 படி அரிசி மாவில் கடலை பருப்பு, தேங்காய், ஏலக்காய், நெய், வெல்லம் சேர்த்து மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டையை காவடி போல எடுத்து வந்து பிள்ளையாருக்கு படையலிடப்பட்டது. பின்னர், அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

00 Comments

Leave a comment