news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருவண்ணாமலை

அருணாச்சலேஸ்வரர் கோவிலின் வட ஒத்தவாடை தெரு ராஜகோபுரம் அருகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே வரிசையிலேயே படுத்து உறங்கும்
காட்சிகள்.

அதிகாலை கோவில் நடை திறக்கும் போது சாமி தரிசனம் செய்வதற்காக ராஜகோபுரம் அருகே பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு சென்றதால் பெற்றோர்களோடு குழந்தைகளும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.

கூட்ட நெரிசலுக்கு இடையே தண்ணி தாகம் எடுத்த குழந்தை மற்றும் தாய் தந்தை என அனைவரும் தண்ணீர் பருகும் காட்சிகள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று இருந்த காலம் மாறி தற்போது தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில் இறுதி நாளில் கூட்டம் குறைவாக இருக்கும் என உள்ளூர் வாசிகள் எதிர்பார்த்த நிலையில் இன்றும் நேற்று நள்ளிரவு முதலே அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

வட ஒத்தவாடை தெரு ராஜகோபுரம் அருகில் என சாமி தரிசனம் செய்ய செல்லும் வரிசையிலேயே பக்தர்கள் படுத்து உறங்கினார். அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டவுடன் ராஜகோபுரம் அருகில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு சாமி தரிசனம் செய்ய முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் பெற்றோர்களோடு குழந்தைகளும் சிக்கி தவித்தனர். சிறுமி ஒருவருக்கு தண்ணீர் தாகம் எடுத்தவுடன் கூட்ட நெரிசலுக்கு இடையில் சிறுமியின் தந்தை தண்ணீர் கொடுத்து தாய் தந்தையரும் தண்ணீர் குடித்தனர்.

கூட்ட நெரிசலால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதியில் பெயர் அளவுக்கு கூட ஒரு போலீசார் கூட இல்லை கடந்த கால ஆட்சியில் ஆட்சி முடியும் தருவாயில் நகர காவல் நிலையத்தை அருணாச்சலேஸ்வரர் கோவில் காவல் நிலையம் என்று திறந்த நிலையில் போலீசார் பற்றாக்குறை என்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

Related Link
முருகப்பெருமான் இரண்யா சூரணை வதம் செய்யும் நிகழ்வு

முருகப்பெருமான் இரண்யா சூரணை வதம் செய்யும் நிகழ்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 55 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau