தமிழ்நாடு

வண்டி மலையான், மலைச்சி அம்மன் ஆலய கொடை விழா மூவாயிரம் பெண்கள் பங்கேற்ற மெகா திருவிளக்கு பூஜை | Nellai

நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே நடைபெற்ற கோயில் கொடை விழாவில் 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட மெகா விளக்கு பூஜை நடைபெற்றது. செண்பகராமநல்லூர் கிராமத்தில் எழுந்தருளும் வண்டி மலையான் மற்றும் வண்டி மலைச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனையும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் எவர்சில்வர் தட்டு மற்றும் புடவை பரிசாக வழங்கப்பட்டது.

00 Comments

Leave a comment