தமிழ்நாடு

ஐரோப்பாவில் ஐ.ஐ.டி மெட்ராஸ் மாணவர்கள் குழுவிற்கு விருது.. சாதனையை நிகழ்த்தியுள்ள ஐ.ஐ.டி மெட்ராஸ் மாணவர்கள்

ஐரோப்பாவில் நடைபெற்ற ஹைப்பர்லூப் வாரம் என்ற நிகழ்வில் ஐ.ஐ.டி மெட்ராஸ் மாணவர்களின் ஹப்பர்லூப் டீம் ஆவிஷ்கார் குழு முதல் முன்று இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் மாணவர்கள் உருவாக்கிய ஆவிஷ்கார் என்ற கருவி முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும். இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 2023 ஐரோப்பிய ஹைப்பர்லூப் வாரம் நிகழ்வில் ஐ.ஐ.டி மெட்ராஸ் ஹைப்பர்லூப் டீம்மின் ஆவிஷ்கார் குழு, 23 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளுக்கும் இக்குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment