கல்வி

அடுத்த ஆண்டு நீட் தேர்வு பற்றிய அறிவிப்பு | NEET Exam

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட், அடுத்த ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும் என தேசிய தகுதித் தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள்  2024 ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  பொறியியில் படிப்புகளுக்கானJEE தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும்.  முதல் அமர்வு வரும் ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்குள்ளும், இரண்டாவது அமர்வு  ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள்ளும் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment