இந்தியா

மீண்டும் மீண்டும் தேசிய கீதத்தை அவமானப்படுத்துவதாக புகார்

மீண்டும் மீண்டும் தேசிய கீதத்தை அவமானப்படுத்துவதாக புகார்

 

தமிழ்நாடு அரசு மீண்டும் மீண்டும் தேசிய கீதத்தை அவமானப்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டபேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என ஆளுநர் சொல்லியும் அதை கூட செய்யமுடியாது என்ற தமிழக அரசின் ஆணவபோக்கு மிகவும் கண்டனத்துக்கு உரியது என கூறியுள்ள அவர், தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை அருகில் வைத்து கொண்டு அமைச்சர் எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்பது போல பேசுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தான் ஜனநாயகமா ? இப்படி தான் மக்கள் போற்றும்,சட்டபேரவை நடத்தப்பட வேண்டுமா ? தேசிய கீதத்தை புறக்கணித்து, ஆளுநரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா...? என கேள்வி எழுப்பியுள்ளார்.

00 Comments

Leave a comment